×

85% மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை அக்டோபரில் கொரோனா 3வது அலை: குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு

புதுடெல்லி: இந்தியாவில் அக்டோபர் மாதம் முதல் கொரோனா 3வது அலை பரவத் தொடங்கும் என்று 85 சதவீத மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக இங்கிலாந்து ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றினால் இதுவரையில் 3 கோடி பேர் பாதித்துள்ளனர். 3 லட்சத்து 83 ஆயிரத்து 490 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். கொரோனா 2வது அலையின் தீவிரத்தால், கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி, ஆக்சிஜன், தடுப்பு மருந்து, படுக்கைகள் பற்றாக்குறையினால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் செய்தி நிறுவனம், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், வைரஸ் நிபுணர்கள், தொற்று நோயியல் நிபுணர்கள், மருத்துவ பேராசிரியர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவிடம் ஆய்வு மேற்கொண்டது.இதில், 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள், இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபரில் பரவத் தொடங்கும் ்அல்லது அதற்கு முன்பாகவே ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் பரவும் வாய்ப்புள்ளது. ஆனால், இதனை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.  அதே நேரம், நாட்டில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தற்போது நடைமுறையில் இல்லாததால், 3வது அலையில் குழந்தைகள், சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மூன்றில் 2 மடங்கு மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டும், அதற்கான தயாரான நிலையில் இல்லாவிட்டால், கடைசி நிமிடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடும். அது மட்டுமில்லாமல், குறைந்தளவு குழந்தைகள் நல மருத்துவர்களை கொண்டு, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிப்பதும் கடினம். குழந்தைகளுக்கான குறைந்தளவு தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை வைத்து கொண்டு மிகவும் சிரமத்துக்குள்ளாக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.கொரோனா 3வது அலை உருவாக காரணமாக இருக்கும் உருமாற்றம் அடைந்த வைரஸ், ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகளின் பலனை முறியடிக்க கூடியதாக இருக்க கூடுதல் வாய்ப்புள்ளது. இந்த 3வது அலை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மக்களின் சுகாதாரத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இதனால், சில மாநிலங்கள் தளர்வுகளை திரும்ப பெற்றது போல, உடனடியாக தளர்வுகளை திரும்ப பெறாமல், ஊரடங்கு விதிகளை பின்பற்றினால், தொற்று பாதிப்பு குறையக் கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுவரை, இந்தியாவில் தடுப்பூசி போட தகுதியுள்ள 95 கோடி பேரில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.எளிதில் கட்டுப்படுத்தப்படும்எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “கொரோனா 3வது அலை எளிதில் கட்டுப்படுத்த கூடியதாக இருக்கும். கொரோனா 2வது அலையின் மூலம் இயற்கையாகவே கிடைத்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், குறைந்தளவு மக்களே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, ஏராளமானோருக்கு தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது,’’ என்றர்….

The post 85% மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை அக்டோபரில் கொரோனா 3வது அலை: குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : 3rd wave of Corona ,New Delhi ,India ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை