×

திருப்பதியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் விஜர்சனம்-பலத்த பாதுகாப்புடன் நடந்தது

திருப்பதி : திருப்பதியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலைகள் விஜர்சனம் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தது.திருப்பதியில் கடந்த 31ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மண்டபங்களில் வைக்கப்பட்ட சிலைகள் 5ம் நாளான நேற்று விஜர்சனம் செய்ய ஊர்வலமாக திருப்பதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து கரக்கம்பாடி சாலையில் உள்ள விநாயகர் சாகர் ஏரி பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.
பின்னர், அங்கு சிறப்பு பூஜைகள் செய்து கிரேன் மூலமாக விநாயகர் சிலைகள் கரைப்பு நடைபெற்றது.

திருப்பதி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புதிய மாநகராட்சி கட்டிட வடிவிலான விநாயகர் சிலைக்கு திருப்பதி எம்எல்ஏ கருணாக ரெட்டி, மேயர் சிரிஷா, ஆணையாளர் அனுபமா அஞ்சலி உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தனர்.

தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக ஆடல் பாடல் பேண்ட் வாத்தியங்கள் முழங்க வண்ணப் பொடிகள் பூசிக்கொண்டு விநாயகர் சாகர் ஏரியில் சிலையை கரைத்தனர். அப்போது எம்எல்ஏ கூறுகையில், மாநகராட்சி அலுவலகத்தில் முதன்முறையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் செய்து வழிபட்டு ஊர்வலமாக பக்தி பரவசத்துடன் அனைவருக்கும் நன்மை கிடைக்க இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளோம். இனி வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார்.  

விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலத்தின்போது பாதுகாப்பு பணியில் காவல்துறை, விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர், மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறையினர் ஈடுபட்டனர்.


₹10 லட்சத்திற்கு லட்டு ஏலம்

மாநகராட்சி அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று படைக்கப்படும் லட்டு, சிலை கரைப்பு தினத்தில் ஏலம் விடுவது வழக்கம். இந்நிலையில், விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ₹10 லட்சத்திற்கு ஏலம் போனது. இத்தொகையை அடுத்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்திக்கு வரவு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Vijarsanam ,Ganesha ,Tirupati , Tirupati: Vijarsanam of Ganesha idols consecrated at various places in Tirupati took place yesterday with tight security.
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...