25வது நினைவு தினத்தை முன்னிட்டு 25 அடி உயர துணியில் அன்னை தெரசா ஓவியம்-பாளை மாணவிகள் அசத்தல்

நெல்லை :  அன்னை தெரசா 25வது நினைவுதினத்தை முன்னிட்டு பாளை வஉசி  மைதானத்தில் 25 அடி உயரம், 20 அடி அகலத்தில் அன்னை தெரசாவின்  முழுஉருவ ஓவியத்தை மாணவிகள் தத்ரூபமாக வரைந்து அசத்தினர்.அன்னை  தெரசா 25வது நினைவுதினம் இன்று (5ம்தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி  நெல்லை அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை மற்றும் சிவராம் கலைக்கூடம் சார்பில்  25 அடி உயரம் மற்றும் 20 அடி அகல துணியில் அன்னை தெரசாவின் முழுஉருவ  ஓவியம் வரையும் நிகழ்ச்சி  பாளை வஉசி மைதானத்தில் நேற்று  நடந்தது.  ஓவிய ஆசிரியர் கணேசன் வழிகாட்டுதலுடன் சிவராம் கலைக்கூடத்தை சேர்ந்த ஓவிய  பயிற்சி மாணவிகள் 40பேர், இந்த ஓவியத்தை சுமார் 2 மணி நேரத்தில்  தத்ரூபமாக வரைந்தனர்.

ஓவியத்தின் மேல் பகுதியில் `சேவையை சாதனை ஆக்கிய  அன்னைக்கு நினைவு ஓவியம் என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இது குறித்து  மாணவிகள் கூறுகையில், அன்னை தெரசாவின் தியாக சாதனைகள் இன்றைய இளம்தலைமுறையினர் அறிந்து பின்பற்றுவது அவசியம் என்பதை வலியுறுத்தி இந்த ஓவியம்  வரைந்தோம் என்றனர். முன்னதாக  நிகழ்ச்சியை மனநல டாக்டர் பன்னீர்செல்வம், தலைமை வகித்து துவக்கி  வைத்தார். மாரி முன்னிலை வகித்தார். கணபதி சுப்பிரமணியன் பேசினார். அன்னை  தெரசா பொதுநல அறக்கட்டளை தலைவர் மகேஷ்

நன்றி கூறினார்.

Related Stories: