×

ஊட்டியில் 100 விநாயகர் சிலை விஜர்சனம்

ஊட்டி : ஊட்டியில் இரண்டாவது நாளாக நேற்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.100க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த 31ம் தேதி பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஊட்டி நகரம் மற்றும் மஞ்சூா், குந்தா உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் 3,4 மற்றும் 5 ஆகிய 3 நாட்கள் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வி.எச்.பி., மற்றும் சிவசேனா சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. நேற்று இரண்டாவது நாளாக இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஊட்டியில் நடந்தது. முன்னதாக விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் சோிங்கிராஸ் தேவாங்கர் மண்டபம் அருகில் கொண்டு வந்தனர்.

அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மதியம் 3 மணியளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் துவங்கியது. இதில் லாாி, ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் துவங்கிய சிறிது நேரத்தில் கனமழை கொட்டியது. கனமழைக்கு நடுவே தேவாங்கா் மண்டபம் அருகே துவங்கிய ஊர்வலம் சோிங்கிராஸ், கமர்சியல் சாலை, ஐந்து லாந்தர், மெயின் பஜார் வழியாக ஆடல், பாடல்களுடன் கோஷத்துடன் மின்வாாிய ரவுண்டானாவை அடைந்தது.

பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலைகள் காமராஜர் சாகர் அணைக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. ஊர்வலத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்ட எஸ்பி., ஆசிஷ் ராவத் தலைமையில் உள்ளூர் போலீசார், அதிரடிப்படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவலா்கள், ஊர்காவல் படை காவலர்கள் உட்பட ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (5ம் தேதி) கோத்தகிரியில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது.

Tags : Vijarsanam ,Ganesha ,Ooty , Ooty: For the second day in Ooty yesterday, a Ganesha idol procession was held by the Hindu Front. More than 100 idols were in procession.
× RELATED பூங்காவில் பூத்தது ரோஜா பூக்கள்