தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் வழங்கும் விழா!: இராவணன் பட நடிகர் விக்ரம்..காக்கா முட்டை பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு விருது வழங்கி கவுரவிப்பு..!!

சென்னை: 2009 முதல் 2014ம் ஆண்டு வரையிலான வெள்ளித்திரை, சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. 2009 முதல் 2014 வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த பட தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2ம் பரிசு ரூ.1 லட்சம், 3ம் பரிசு ரூ.75,000; சிறந்த படம் சிறப்பு பரிசு ரூ.75,000 என 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ.26.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்கு தலா 5 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

2009ல் இருந்து 2014 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை தமிழ்நாடு அரசு 2017ல் அறிவித்தது. 2009ல் சிறந்த படத்துக்கான முதல் பரிசு - பசங்க, 2ம் பரிசு மாயாண்டி குடும்பத்தார், 3ம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு, 2009ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான விருது மலையன் படத்தில் நடித்த கரணுக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

* தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 160 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.

* மலையன் படத்திற்காக கரணுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

* இராவணன் படத்திற்காக விக்ரமுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது.

* வாகை சூடவா படத்திற்காக நடிகர் விமலுக்கு விருது வழங்கப்பட்டது.

* நீ தான் என் பொன் வசந்தம் படத்திற்காக நடிகர் ஜீவாவுக்கு விருது வழங்கப்பட்டது.

* ராஜா ராணி படத்திற்காக நடிகர் ஆர்யாவுக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. காவியத்தலைவன் படத்திற்காக நடிகர் சித்தார்த்துக்கு விருது.

* காக்கா முட்டை படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.

* சதுரங்க வேட்டை படத்திற்காக ஹெச்.வினோத்துக்கு சிறந்த கதையாசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

* மறைந்த கவிஞர் நா.முத்துக்குமாரின் 3 பாடல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

* இயக்குநர்கள் சமுத்திரக்கனி, லிங்குசாமி, பாண்டிராஜ், நடிகைகள் அஞ்சலி, சங்கீதாவுக்கு விருது வழங்கப்பட்டது.

* அங்காடித் தெரு படத்தை இயக்கிய வசந்தபாலனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

* மைனா படத்தை இயக்கிய பிரபு சாலமனுக்கு  சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.

* தெய்வத் திருமகள் படத்திற்காக ஏ.எல்.விஜய்க்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.

* வழக்கு எண் 18/9 படத்திற்காக இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு விருது வழங்கப்பட்டன.

* தங்க மீன்கள் படத்தை இயக்கிய ராமுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

* மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவனுக்கு  சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

* நெடுந்தொடர், தயாரிப்பாளர்கள், கதாநாயகர்கள், கதாநாயகன், தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 314 பேருக்கு காசோலை, தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 2015 முதல் 2022ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்திற்கான விருதுகள் வழகின தேர்வுக்குழு ஏற்பாடு செய்துள்ளது. கேளிக்கை வரி குறைப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க உறுதியளிக்கப்பட்டது.

Related Stories: