பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் அறுந்து விழுந்து விபத்து: குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயம்..!!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நடந்த பொருட்காட்சியில் ராட்டினம் ஒன்று பாதியில் கழன்று விழுந்த விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். மொஹாலியில் இருக்கும் தசரா மைதானத்தில் பொருட்காட்சி நடந்தது. அதில் விவால்விங் டவர் என்று ராட்டினம் வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு 9:15 மணியளவில் அதில் சுமார் 50 பேர் அமர்ந்துள்ளனர். வழக்கம் போல அந்த ராட்டினம் இயக்கப்பட்டுள்ளது.

உச்சிக்கு சென்ற அந்த ராட்டினம் கழன்று மீண்டும் இறங்க தொடங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த இணைப்பு கம்பிகள் அறுந்து ராட்டினம் வேகமாக சரிந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: