கனமழையால் பல இடங்களில் மண் சரிவு; மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்பட 19 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே நீலகிரி மலைப் பகுதியில் பெய்யும் தொடர் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கல்லார்-ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்சரிவை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: