×

புகைப்படம், கட்டண விவரங்களை வெளியிட்டு இளைஞர்களுக்கு வலை; இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி கொடிகட்டி பறக்கும் பாலியல் தொழில்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாழாகும் அவலம்

பெரம்பூர்: பாலியல் தொழில் என்பது அந்த காலம் முதல் இந்த காலம் வரை பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை அடைந்து பல்வேறு யுத்திகளில் கையாளப்பட்டு வருகிறது. மொழி, இனம், மதம் கடந்து எந்தவித பேதமும் இன்றி செய்யப்படும் தொழில்களில் பாலியல் தொழிலும் ஒன்று. அந்த காலத்தில் மறைவான இடங்களில் நடத்தப்பட்ட இந்த தொழில் சமூக வலைதளங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சி காரணமாக தற்போது வெளிப்படையாக நடைபெற தொடங்கிவிட்டது. புரோக்கர்கள் மூலமாகவும், பேஜர் மூலமாகவும். செல்போன் எண்கள் மூலமாகவும் தங்கள் தொழிலை வளர்த்து வந்த பாலியல் தொழிலாளர்கள் தற்போது வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளின் வழியாக தங்களது தொழிலை நடத்தி வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் மேற்கண்ட செயலிகளில் கணக்கு வைத்திருக்காத நபர்களே இல்லை என்ற நிலை உள்ளது. வயதானவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்துள்ளனர். இதன் மூலம் பல நல்ல தகவல்களை பரிமாறிக்கொண்டு அதை பயனுள்ளதாக பயன்படுத்தும் நபர்களை காட்டிலும், அந்த செயலியை தவறாக பயன்படுத்தும் நபர்கள் தற்போது அதிகரிக்க தொடங்கி விட்டனர். செயலியை பயன்படுத்த செல்போன் எண் எதுவும் தர வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு மின்னஞ்சல் முகவரி இருந்தால் போதும். அவ்வாறு பதிவிறக்கம் செய்த பிறகு ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் உள்ள பலரையும் தேடி பிடிக்கின்றனர்.

குறிப்பாக, புகைப்படம், விவரங்கள், விரும்பும் விஷயங்கள் உள்ளிட்டவற்றை பார்த்து நண்பர்களை தேர்வு செய்கின்றனர். தற்போது வெளிப்படையாகவே நான் தனியாக இருக்கிறேன், எனக்கு ஆண் துணை வேண்டும் என்றும், மாதம் இவ்வளவு சம்பாதிக்கலாம் பாலியல் தொழிலுக்கு வருபவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும் எனவும் வெளிப்படையாகவே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பாலியல் தொழில் தொடர்பான வாசகங்களை வைக்கின்றனர். இதனை பார்த்து பலர் சாட்டிங் செய்கின்றனர். அதில் பேசும் சில பெண்கள் அந்தரங்க பாகங்களை காட்ட வேண்டும் என்றால் இவ்வளவு பணம் நீங்கள் செலுத்த வேண்டும், என தங்களது தெரிவிக்கின்றனர். சபல புத்தி கொண்ட ஆண்கள் பலரும் வீடியோக்களை பார்க்க 300 ரூபாய் 500 ரூபாய் வரை செலுத்தி வீடியோக்களை பார்க்கின்றனர். மேலும், வீடியோ காலில் வர வைத்து பார்க்கின்றனர். இவ்வாறு சில பெண்கள் நேரடியாகவே இன்ஸ்டாகிராமில் வீடியோக்களின் மூலமாகவோ வாடிக்கையாளர்களை கவர்ந்து இதுபோன்று பணம் சம்பாதிக்கின்றனர். சில புரோக்கர்கள் இது போன்ற செயலிகளில் போலியான பெண்களின் புகைப்படங்களை அதில் வைத்து அவர்கள் பணம் கட்டிய பின்பு வேறு சில பெண்களின் வீடியோக்களை காண்பிக்கின்றனர் அல்லது பாலியல் தொழிலில் உள்ள பெண்களை குடும்ப பெண்கள் என்று ஏமாற்றி  பணம் பறிக்கின்றனர். மற்ற செயலிகளை விட இன்ஸ்டாகிராம் செயலியில் பாலியல் தொழில் அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும் இதில் குழுக்கள் அமைத்து அதன்மூலமும் பாலியல் தொழில் நடைபெறுகிறது. ஐடி நிறுவனத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும்  சமூகத்தில் நல்ல வேலையில் உள்ளவர்கள் வார இறுதி நாட்களில் அந்த குழுவில் உள்ள நபர்களை தேர்ந்தெடுத்து டேட்டிங் என்ற பெயரில் இசிஆர், மாமல்லபுரம், பாண்டிச்சேரி என அவர்களை அழைத்து சென்று ஜாலியாக இருந்து வருகின்றனர். இதில் பலர் தங்களது அரை நிர்வாண புகைப்படங்களை பதிவிடுவது முதல் தங்களது பார்ட்னர்களை தேர்ந்தெடுப்பது வரை என அனைத்தையும் வெளிப்படையாகவே செய்து வருகின்றனர். மேலும் ஒருவரை எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்பதை வைத்து அவர்களுக்கு டிமாண்ட உள்ளது. எனவே அதிக நபர்கள் பார்க்க வேண்டும் என்ற ரீதியில் தங்களது உடைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைத்து புகைப்படம், வீடியோக்களை பலர் பதிவு செய்து வருகின்றனர். இதன் மூலம் சில நேரங்களில் குடும்ப பெண்களும் ஒருவித சபலத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளே சென்று இது போன்ற பக்கங்களை பின்தொடர்கின்றனர்.

மற்ற ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்யும்போது விளையாட்டாக சில பேர் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனிப்பட்ட முறையில் ஷேர் செய்கின்றனர். இதனை வைத்து  குடும்ப பெண்களை மிரட்டி பாலியல் இச்சைக்கு பயன்படுத்துவது மற்றும் மிரட்டி பணம் பறிப்பது போன்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன. எந்த ஒரு நல்ல விஷயம் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதில் எதிர்மறையான விஷயங்களும் வந்து விடுகின்றன. அதனை மக்கள் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பொறுத்து நன்மை, தீமைகள் ஏற்படுகிறது. இன்ஸ்டாகிராம் செயலி பாலியல் தொழில் செய்யும் கூடாரமாக மாறி வருவது தற்போது கவலை அளிக்க கூடிய செய்தியாக உள்ளது. இதனை அரசு தீவிரமாக கண்காணித்து இதன் மூலம் பாலியல் தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags : Web for youth by publishing photos, payment details; Sex industry using Instagram app to fly the flag: school and college students are doomed
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...