பிரமாண்ட தொலைநோக்கியில் அதிசயம், சுற்றுலா பயணிகளை ஈர்க்க இரவு வான் சரணாலயம்; லடாக்கில் ஒன்றிய அரசு திட்டம்

லடாக்: லடாக்  யூனியன் பிரதேசத்தில் இந்தியாவின் முதல் ‘இரவு வான் சரணாலயம்’அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இயற்கை அழகு கொள்ளை கொள்ளையாக கொட்டிக் கிடைக்கும் ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் , சுற்றுலாவை ஊக்குவிக்க பல முயற்சிகளை  ஒன்றிய அரசு  செய்து வருகிறது. உலகின் உயரமான ரயில் பாதை, நீண்ட மலை சுரங்கப் பாதை, அழகிய நீண்ட தேசிய நெடுஞ்சாலைகள் போன்றவற்றை அமைத்து, சர்வதேச அளவில் மக்களை கவர்ந்து வருகிறது. இதன் மற்றொரு அம்சமாக, லடாக் யூனியன் பிரதேசத்தில் ‘இரவு வான் சரணாலயம்’ அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த புதிய ‘இரவு வான் சரணாலயம்’, லடாக்கில் உள்ள சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக, ஹான்லேயில் அமைக்கப்படுகிறது. இந்தியாவில் வானியல் சுற்றுலாவை அதிகரிக்க அது உதவியாக இருக்கும். இங்கு வானில் நடக்கும் அதிசயங்களை கண்டு களிப்பதற்காக, ஆப்டிகல், புறஊதாக் கதிர் மற்றும்  காமா கதிர்வீச்சு கொண்ட பிரமாண்ட தொலைநோக்கிகள் அமைக்கப்பட உள்ளது. ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பில்,  முதல் முறையாக இதுபோன்ற முயற்சி  செய்யப்படுகிறது. அடுத்த 3  மாதங்களில் இந்த சரணாலயம்  கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Related Stories: