×

டி20ல் முஷ்பிகுர் ஓய்வு

வங்கதேச விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் முஷ்பிகுர் ரகிம் (35 வயது), சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வங்கதேச அணிக்காக, முஷ்பிகுர் இதுவரை 102 டி20 போட்டியில் விளையாடி 1500 ரன் (அதிகம் 72, சராசரி 19.48, அரை சதம் 6) எடுத்துள்ளார். இது தவிர 82 டெஸ்டில் 5235 ரன் (அதிகம் 219, சராசரி 37.93, சதம் 9, அரை சதம் 25) மற்றும் 236 ஒருநாள் போட்டியில் 6774 ரன் (அதிகம் 144, சராசரி 36.81, சதம் 8, அரை சதம் 42) குவித்துள்ளார்.

Tags : Mushfiqur , Mushfiqur retired in T20
× RELATED ஷாகிப், முஷ்பிகுர் அரை சதம் ஆப்கானிஸ்தானுக்கு 263 ரன் இலக்கு