×

டிரென்ட் ராக்கெட்ஸ் சாம்பியன்

ஆண்களுக்கான ‘தி ஹண்ட்ரட்’ 100 பந்து கிரிக்கெட் போட்டியில், டிரென்ட் ராக்கெட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த பைனலில் டாஸ் வென்று பேட் செய்த மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி 100 பந்தில் 9 விக்கெட் இழப்புக்கு 120 ரன் குவித்தது. டிரென்ட் வேகம் சாம் குக் 4 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய டிரென்ட் ராக்கெட்ஸ் 98 பந்தில் 8 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து வென்றது. சாம் குக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி வீரர் ஆடம் லித் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Tags : Trent Rockets , Trent Rockets champion
× RELATED எஞ்சிய போட்டிகளில் மயங்க் யாதவ்...