×

குஜராத் ஜயன்ட்ஸ் அணியில் கிறிஸ் கேல்

முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் (எல்எல்சி) டி20 தொடரின் 2வது சீசன், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் செப். 16ம் தேதி இந்தியா மகாராஜாஸ் - உலக ஜயன்ட்ஸ் மோதும் காட்சிப் போட்டியுடன் தொடங்குகிறது. இந்த தொடரில் குஜராத் ஜயன்ட்ஸ், இந்தியா கேப்பிடல்ஸ், பில்வாரா கிங்ஸ், ஹன்சால் டைகர்ஸ் ஆகிய 4 அணிகள் பங்கேற்கின்றன. வீரேந்திர சேவக் தலைமையிலான குஜராத் ஜயன்ட்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கேல் இடம் பெற்றுள்ளார். போட்டிகள் கொல்கத்தா (செப். 16-18), லக்னோ (செப். 21, 22), டெல்லி (செப். 24-26), கட்டாக் (செப். 27-30) மற்றும் ஜோத்பூரில் (அக். 1-3) நடைபெற உள்ளன. பிளே ஆப் சுற்று (அக். 5, 7), இறுதிப் போட்டிக்கான (அக். 8) களம் பின்னர் அறிவிக்கப்படும்.

Tags : Chris Gayle ,Gujarat Giants , Chris Gayle in Gujarat Giants
× RELATED ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை டிராபி டூர் நியூயார்க்கில் தொடக்கம்!!