×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 4-வது சுற்றில் நடால், அல்கரஸ் குவித்தோவா, பிளிஸ்கோவா முன்னேற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீரர்கள் ரபேல் நடால், கார்லோஸ் அல்கரஸ் தகுதி பெற்றனர். 3வது சுற்றில் பிரான்ஸ் வீரர் ரிச்சர்ட் காஸ்கேவுடன் மோதிய நடால் 6-0, 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய இளம் வீரர் கார்லோஸ் அல்கரஸ் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை வீழ்த்தினார். இப்போட்டி 2 மணி, 11 நிமிடத்தில் முடிந்தது.

கனடாவின் டெனிஸ் ஷபோவலாவுடன் மோ திய ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா) 6-4, 2-6, 6-7 (3-7), 6-4, 7-6 (10-7) என 5 செட்களில் கடுமையாகப் போராடி வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீரர்கள் யானிக் சின்னர் (இத்தாலி), பிரான்செஸ் டியபோ (அமெரிக்கா), கேமரான் நோரி (இங்கிலாந்து), மரின் சிலிச் (குரோஷியா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்துள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஸ்பெயினின் கார்பினி முகுருசாவை எதிர்கொண்ட பெத்ரா குவித்தோவா (செக் குடியரசு) 5-7, 6-3, 7-6 (12-10) என்ற செட் கணக்கில் 2 மணி, 28 நிமிடம் போராடி வென்றார். மற்றொரு செக். வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சுவிஸ் நட்சத்திரம் பெலிண்டா பென்சிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி
பெற்றார். அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா, டேவியலி கோலின்ஸ், நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போ லந்து), விக்டோரியா அசரென்கா,  அரினா சபலென்கா (பெலாரஸ்) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Tags : Nadal ,Algarez Kvitova ,Pliskova ,US Open , Nadal, Algarez Kvitova, Pliskova advance to US Open tennis 4th round
× RELATED பயணம் இன்னும் முடியவில்லை… நடால் நெகிழ்ச்சி