மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் வழக்குகளை ரத்து செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை கடும் எதிர்ப்பு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 முதல் தகவல் அறிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அதற்கு எஸ்பி. வேலுமணி மீதான ஊழல் வழக்கில் 2 முதல் தகவல் அறிக்கைகளை ரத்துக்செய்யக்கூடாது என்று லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை ஐகோர்ட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் அரசின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய கோரி அறப்போர் இயக்கம், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முதலில் புகார் அளித்து இருந்தனர். மேலும், கோவை லஞ்ச ஒழிப்பு துறையினர் தங்களிடம் உள்ள ஆதராங்களின் அடிப்படையில் எஸ்பி வேலுமணி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து உள்ளனர். இந்நிலையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் (டிவிஏசி), தனக்கு எதிராக பதிவு செய்த 2 முதல் தகவல் அறிக்கைகளை (எப்ஐஆர்) ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு தாக்கல் செய்தார்.

இதற்கு விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அண்மையில் அளித்துள்ள பதில் மனுவில், ‘எஸ்பி வேலுமணி அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்துள்ளார். சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையிலேயே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு ஒப்பந்த பணிகளை செய்வதற்காக பி செந்தில் அண்ட் கோ என்ற பெயரில் தன் குடும்பத்தினருடன் இணைந்து எஸ்பி.வேலுமணி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். அந்நிறுவனத்துக்கு பதவியை பயன்படுத்தி இவர் டெண்டர்களை முறைகேடாக வழங்கியுள்ளார். வேலுமணிக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது முழுக்க முழுக்க விதிமீறலாகும். ஏராளமான அரசு பணத்தை அபகரிக்க இவர் மிகப்பெரிய சதி செய்துள்ளார். அதனால் வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது’ என்று தெரிவித்துள்ளது.

Related Stories: