தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; கேரள முதல்வருக்கு பாராட்டு

சென்னை: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் கடந்த 3ம் தேதி  தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட 6 மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.

 

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை திரும்பியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புகளுக்கு நன்றி. சமீப காலத்தில் முன்மொழியப்பட்ட முன்னெடுப்புகளை விரைவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோம் என்பதில் நம்பிக்கை உள்ளது. மேலும், தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை சிறப்பாக நடத்தியமைக்காக பாராட்டுகள் என கூறியுள்ளார்.

Related Stories: