×

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டேனா? அதுல்யா பதில்

சென்னை: ‘ஏமாலி’,‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’,‘கேப்மாரி’,‘நாடோடிகள் 2’,‘முருங்கைக்காய் சிப்ஸ்’,‘கடாவர்’உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர், அதுல்யா. நாள்தோறும் தனது சமூக வலைத்தளங்களில் புதிய போட்டோக்களை வெளியிடுவது அவரது வழக்கம். நேற்று முன்தினம் வெளியிட்ட போட்டாக்களில் அவரது முகத்தோற்றம் சற்று மாறியிருந்தது. இதையறிந்த ரசிகர்கள், அவர் தனது அழகை மெருகூட்ட மூக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு அவரிடம் கேள்விகள் கேட்டனர்.

‘கண்டிப்பாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பார். அதனால்தான் இவ்வளவு வித்தியாசமாக தெரிகிறார்’என்றும் பலர் கமெண்ட் பதிவு செய்தனர். இந்நிலையில், தன்னைப் பற்றி வெளியான தகவலை மறுத்துள்ள அதுல்யா, ‘எனது பெற்றோர் நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்துகொள்ள அனுமதிக்க மாட்டார்கள். கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் தீவிர உடற்பயிற்சியின் காரணமாக எனது முகம் மற்றும் உடல் தோற்றம் மாறியிருக்கிறது’என்று கூறியுள்ளார். தற்போது ஹரீஷ் கல்யாண் ஜோடியாக ‘டீசல்’ என்ற படத்தில் அதுல்யா நடித்து வருகிறார்.

Tags : Atulya , Have you had plastic surgery? Atulya replied
× RELATED இரட்டை இயக்குனர்களின் படத்தில் வைபவ், அதுல்யா