×

இந்தியா - அமெரிக்கா இடையே டெல்லியில் இன்று 2+2 பேச்சுவார்த்தை; இருநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு

வாஷிங்டன்: வெளியுறவு, பாதுகாப்புத் துறைகளில் இருநாட்டு உறவை பலப்படுத்தவும், புதிய ஒப்பந்தகளை மேற்கொள்ளவும், இந்திய, அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது, 2+2 பேச்சுவார்த்தை என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், இந்த அமைச்சர்கள் இடையே விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட வேண்டிய அம்சங்கள், ஒப்பந்தங்களை பற்றி முன்கூட்டியே ஆலோசித்து இறுதிநிலையை எட்டுவதற்காக, இருநாட்டு அதிகாரிகள், பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, டெல்லியில் இன்று தொடங்குகிறது.

வரும் 8ம் தேதி நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவு துணை அமைச்சர் டொனால்டு லூவும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் விவகாரங்களுக்கான பாதுகாப்பு அமைச்சக துணை அமைச்சர் கெமிலி டாவ்சனும் பங்கேற்கின்றனர். தடையற்ற கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி இதில் ஆலோசிக்கப்பட உள்ளது.

Tags : India ,USA ,Delhi , 2+2 talks between India and USA in Delhi today; Bilateral delegation participation
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...