வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா துவக்கம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா துவங்கியது. திருவள்ளூரில் உள்ள ஸ்ரீமத் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாகிய ஸ்ரீ வேம்புலி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் யாத்திரை உற்சவம் தொடங்கியது. இதையொட்டி கடந்த 2ம் தேதி அபிஷேகம், அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.

விழாவின் இறுதி நாளான 11ம் தேதி காலை 7 மணிக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரம் மற்றும் இரவு அம்மன் வீதி உலா  புறப்பாடு நடைபெற உள்ளது. இந்த ஜாத்திரை விழாவை முன்னிட்டு சிறப்பு தாரை, தப்பட்டை, திருப்பதி பேண்ட் வாத்தியம் மற்றும் வாணவேடிக்கையும் பொய்க்கால் குதிரை நையாண்டி மேளம் கரகாட்டம்,  கேரள செண்டை மேளம் காஞ்சி கைச் சிலம்புடன் நடைபெற உள்ளது.

ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு தினமும் பகல் 12 மணியளவில் மக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் வேம்புலி அம்மன் சேவை சங்கம் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்து உள்ளனர்.

Related Stories: