×

கழிவு மேலாண்மையில் அலட்சியம்; மேற்கு வங்கத்துக்கு ரூ.3500 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் திட மற்றும் திரவ கழிவுநீர் மேலாண்மையில் அலட்சியம் காட்டப்படுவதாக, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இம்மாநில அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.  இதை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அது தனது தீர்ப்பில், ‘திட மற்றும் திரவு கழிவு மேலாண்மை, சுத்திகரிப்பில் மேற்கு வங்க அரசு பெரிய இடைவெளி ஏற்படுத்தி, சுற்றுச்சூழல் பாதிப்புக்கு வழிவகுத்து உள்ளது. 2022-2023-ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் திட, திரவ கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.12,818.99 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அப்படி இருந்தும், கழிவுநீர் மற்றும் திடகழிவு மேலாண்மைக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை.  இதன்மூலம், சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்திய பாதிப்புக்காக மேற்கு வங்க அரசுக்கு ரூ.3,500 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது,’ என கூறியுள்ளது.

Tags : West Bengal ,National Green Tribunal , Negligence in waste management; Rs 3500 crore fine for West Bengal: National Green Tribunal orders
× RELATED கடும் வெப்ப அலை: மேற்கு வங்க பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை