×

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை; 2 பாகங்களாக உருவாகிறது

சென்னை: ஆர்.எஸ் இன்போடெயின்மெண்ட் எல்ரெட் குமார், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் இணைந்து வழங்கும் படம், ‘விடுதலை’. வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தில் ஆசிரியர் வேடத்தில் விஜய் சேதுபதி, போலீஸ் கேரக்டரில் கதையின் நாயகனாக சூரி நடிக்கின்றனர். மற்றும் பவானிஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன்  நடிக்கின்றனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைக்கிறார்.

இப்படம் 2 பாகங்களாக உருவாகிறது என்று தயாரிப்பு தரப்பு நேற்று அறிவித்துள்ளது. இப்படத்தின் முதல் பாகத்துக்கான படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சிறுமலை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் ‘விடுதலை 2’ம் பாகத்துக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Tags : Vetrimaran , Vetrimaran's directorial release; Consists of 2 parts
× RELATED சர்வதேச பட விழாவில் ‘விடுதலை’ 2 பாகங்கள்