×

4-வது சுற்றில் மெட்வதேவ் கார்சியா முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, நம்பர் 1 வீரர் டானில் மெட்வதேவ் (ரஷ்யா) தகுதி பெற்றார். 3வது சுற்றில் சீனாவின் யிபிங் வூ உடன் மோதிய மெட்வதேவ் 6-4, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இப்போட்டி 1 மணி, 55 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 7-6 (7-3), 6-7 (5-7), 7-6 (7-2), 5-7, 6-0 என 5 செட்களில் கடுமையாகப் போராடி அமெரிக்காவின் டாமி பால் சவாலை முறியடித்தார். இப்போட்டி 4 மணி, 23 நிமிடத்துக்கு நீடித்தது. இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேவுடன் மோதிய மேட்டியோ பெரட்டினி (இத்தாலி) 6-4, 6-4, 6-7 (1-7), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், கரென் கச்சனோவ் (ரஷ்யா), கரெனோ புஸ்டா (ஸ்பெயின்) ஆகியோரும் 4வது சுற்றில் நுழைந்துள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் கனடா நட்சத்திரம் பியான்கா ஆண்ட்ரீஸ்குவை வீழ்த்தினார். கோகோ காஃப் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜெபர் (துனிசியா), வெரோனிகா குதெர்மதோவா (ரஷ்யா), அலிசன் ரிஸ்க் அமிர்தராஜ் (அமெரிக்கா), ஷுவாய் ஸாங் (சீனா), சாம்சனோவா (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Tags : Medvedev Garcia , Medvedev Garcia advances in round 4
× RELATED ஹெட் 62, அபிஷேக் 63, மார்க்ரம் 42*, கிளாஸன் 80*...