×

சீனாவின் மிரட்டலுக்கு பதிலடி, தைவானுக்கு நவீன ஆயுதங்கள் சப்ளை; அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: தைவானை தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதற்கு சவால் விடும் வகையில், அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கடந்த மாதம் தைவான் சென்றார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதோடு, தைவானை மிரட்டும் வகையில், அந்நாட்டை சுற்றி போர் பயிற்களில் ஈடுபட்டு வருகிறது. அதே நேரம், அதற்கு ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க அதிபர் பைடனும் சளைக்காமல், தனது நாட்டு எம்பி.க்கள் குழுவை தொடர்ந்து தைவானுக்கு அனுப்பி வருகிறார். மேலும், தைவான் ஜலசந்திக்கு தனது நாட்டு போர்க்கப்பல்களையும் அனுப்பி, சீனாவை சீண்டி வருகிறார்.

இந்நிலையில், சீனாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவானுக்கு ரூ.8.800 கோடி மதிப்புள்ள அதி நவீன போர் தளவாடங்கள் வழங்கப்படும் என அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது. அதிநவீன போர் விமானங்கள், போர் கப்பல்களை அழிக்கக் கூடிய ஹார்பன் பிளாக் வகை ஏவுகணைகள், எதிரி ஏவுகணைகளை நடுவானில் மறித்து அழிக்கும் ஏவுகணைகள், ரேடார் கண்காணிப்பு அமைப்புகள் போன்றவை அளிக்கப்பட உள்ளன. இந்த ஆயுத சப்ளைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆயுத உதவியை நிறுத்தும்படி அமெரிக்காவை அது வலியுறுத்தி இருக்கிறது.

Tags : Taiwan ,China ,US , Supply of modern weapons to Taiwan in response to China's threats; US Notice
× RELATED தைவானில் நள்ளிரவில் சக்தி வாய்ந்த...