×

கண்ணூரில் பயங்கரம் ஜூசில் மயக்க மருந்து கொடுத்து ஈரோட்டை சேர்ந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம்-பெண் உள்பட 3 பேர் கைது

திருவனந்தபுரம் :  ஈரோட்டைச் சேர்ந்தவர் மலர் (44). இவர் கேரள மாநிலம் கண்ணூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரத்தை சேர்ந்த விஜேஷ் (43) மற்றும் முஸ்தபா (42) ஆகிய 2 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோட்டில் வசிக்கும் தன்னுடைய உறவினரான 32 வயதான ஒரு இளம்பெண்ணுக்கு போன் செய்த மலர், கண்ணூருக்கு வந்தால் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அதை நம்பி அந்த இளம்பெண் கடந்த 10 நாட்களுக்கு முன் கண்ணூர் வந்துள்ளார். அவரை தன்னுடைய வீட்டில் தங்க வைத்த மலர், வியாபார விஷயமாக தான் செல்லும் இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.  இந்நிலையில் கடந்த 27ம் தேதி அந்த இளம்பெண்ணை மலர் தன்னுடன் ஆட்டோவில் தலச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.அவர்களுடன் விஜேஷும், முஸ்தபாவும் சென்றனர். பின்னர் மீண்டும் கண்ணூர் வந்த அவர்கள் தங்களது பொருட்களை வைத்திருக்கும் குடோனுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து மலர் அந்த இளம்பெண்ணுக்கு  ஜூசில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

 இதன் பின்னர் மலர் அங்கிருந்து சென்று விட்டார். அந்தப் பெண் மயங்கியவுடன் விஜேஷும், முஸ்தபாவும் சேர்ந்து கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணுக்கு கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக முஸ்தபாவும், விஜேஷும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த இளம்பெண்ணை பார்த்த பக்கத்து வீட்டினர் உடனடியாக அவரை கண்ணூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இது குறித்து கண்ணூர் சிட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. மயக்கம் தெளிந்த பின்னர் போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் தான் அந்த இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பலாத்காரத்திற்கு உடந்தையாக இருந்த மலரை கைது செய்தனர். தலைமறைவான விஜேஷையும், முஸ்தபாவையும் போலீசார் தேடி வந்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் விஜேஷ் கோவையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோவை விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
இதன்பின் மலப்புரத்தில் தலைமறைவாக இருந்த முஸ்தபாவும் கைது செய்யப்பட்டார். விசாரணைக்குப் பின் இருவரும் கண்ணூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Kannur ,Erode , Thiruvananthapuram: Malar (44) hails from Erode. He stays with his family in Kannur, Kerala and buys and sells old items
× RELATED பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேரள...