×

அதிமுக பொதுக்குழு வழக்கில் திங்களன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் திங்களன்று ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மீதான தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று  தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பணத்தி ஓபிஎஸ் தரப்பிற்கு எதிராகவும், ஈபிஎஸ் தரப்பிற்கு சாதகமாகவும் அமைந்தது. இந்நிலையில், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து வரும் திங்களன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜூலை 11ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்றைய தினமே அறிவிப்பு ஒன்றையும் தெரிவித்தார். இச்சூழலில் சட்டவிதிகளை மீறி பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதாக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு செல்லாது, ஜூன் 23ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கானது கடந்த வாரம் இருவர் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தீவிர விசாரணை மற்றும் வாதங்களை கேட்ட நீதிபதிகள் அமர்வு நேற்றைய தினம் இதற்கான தீர்ப்பை வழங்கியது. அதில் ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும், அதற்கான தடை நீக்கப்பட்டது மட்டுமின்றி, விரிவான தகவல் அறிக்கையும்  வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் வரும் திங்களன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. மேலும், இருவர் அமர்வு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, சட்டப்போராட்டத்தை நடத்தி உரிய தீர்ப்பினை பெறுவோம் எனவும் ஓபிஎஸ் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : O. Panneerselvam ,Supreme Court ,AIADMK General Committee , AIADMK, General Assembly, Monday, Supreme Court, Appeal, O. Panneerselvam
× RELATED ஓபிஎஸ்சுக்கு ஓட்டு போடாத 7 பேருக்கு ஓட, ஓட வெட்டு: பொதுமக்கள் சாலை மறியல்