×

காங். தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல் காந்தி சம்மதம்?: வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் மூத்த தலைவர்களுக்கு உறுதி

டெல்லி: மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கட்சி சார்பில் மூத்த நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என்று ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவது இல்லை என சோனியா மற்றும் ராகுல்காந்தி ஏற்கெனவே கூறியிருந்தனர். இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவர் பதவிக்கு நிறுத்த சோனியா முடிவு செய்ததாகவும், ஆனால் கெலாட் அதனை மறுத்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

இதனிடையே ராகுல்காந்தியே மீண்டும் தலைவர் பதவியை ஏற்கவேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய ராகுல்காந்தியை தொடர்பு கொண்டு பேசிய மூத்த தலைவர்கள் அவரை தலைவர் பதவியை ஏற்கும்படி வலிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துமாறு அறிவுறுத்திய ராகுல்காந்தி, தலைவர் பதவியை ஏற்பது குறித்து நல்ல முடிவை விரைவில் அறிவிப்பதாகவும் மூத்த தலைவர்களிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Raqul Gandhi , Kong. Chairman, Rahul Gandhi, senior leader, confirmed
× RELATED மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய...