×

நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரணம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை:  ரேஷன் அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் கொரோனா நிவாரண உதவி வழங்க வேண்டும் எனக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி சுப்பையா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், அடையாள அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படும். தமிழகத்தில் மொத்தமுள்ள 11,449 மூன்றாம் பாலினத்தவர்களில், ரேஷன் அட்டை வைத்துள்ள 2,956 பேருக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8493 பேருக்கும் நிவாரணதொகை வழங்கப்படும் என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள், அரசின் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தவறாக பயன்படுத்த கூடாது. உண்மையான மூன்றாம் பாலினத்தவர்களின் பெயர், முகவரியை தெரிவிக்க வேண்டும். உதவித்தொகை பெறாமல் விடுபட்டவர்கள் குறித்து தெரிவிக்குமாறும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்….

The post நல வாரியத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவருக்கும் கொரோனா நிவாரணம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Chennai ,Grace ,
× RELATED முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள்...