வாலாஜாபாத் பேரூராட்சி 12-வது வார்டில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சி 12வது வார்டு மஸ்தான் வலி தர்கா தெரு இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் விசித்து வருகின்றனர். மேலும், இப்பகுதியில் அங்கன்வாடி மையம், கோயில்கள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோயில் அருகாமையில் சாலை தாழ்வான நிலையில் உள்ளதால் சிறு மழை பெய்தாலும் கூட குளம் போல் மழைநீர் தேங்கி காட்சியளிக்கின்றன.

இதனால், அந்த வழியாக செல்லும் மக்களும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலை குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், இதுவரை மழைநீர் அங்கிருந்து நிரந்தரமாக செல்வதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு பகுதி இங்கே கற்பக விநாயகர்  கோவில் உள்ளன புகழ்பெற்ற கோயிலுக்கு காலை, மாலையும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் வரை நாள்தோறும் சென்று வருகின்றனர். இந்த கோயில் வளாகத்தின் எதிரே சிறிய அளவில் மழை பெய்தாலும் கூட குளம் போல் தண்ணீர் தேங்கி காட்சியளிக்கின்றன.

மேலும், அதிக அளவில் மழை பெய்தால் கோயிலுக்கு உள்ளேயே மழைநீர் புகும் சூழலும் நிலவுகின்றன. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவிக்கும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் மழை நீரில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுவதால், இதுபோன்ற சூழ்நிலை குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மழை பெய்தால் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: