பந்தலூர் அருகே புகையிலை உட்கொண்டு வகுப்பறையில் மயக்கமடைந்த அரசு பள்ளி மாணவர்கள்

பந்தலூர்: பந்தலூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் புகையிலை உட்கொண்டு வகுப்பறையில் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நேற்று வகுப்பறையில் மயக்கம் அடைந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்டு வந்த பேக்கை சோதனை செய்தனர். அப்போது அதில் புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட் இருந்ததும், அதை உட்கொண்டு மாணவர்கள் மயக்கம் அடைந்ததும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து நேரில் வரவழைத்து அவர்களுடன் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். புகையிலை உட்கொண்டு பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: