அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு; இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கட்சியினர் கொண்டாட்டம்

திருவள்ளூர்: அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில் திருவள்ளூர் நகரம், மற்றும் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மேலும் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம், தேரடி, பஜார் வீதி, எம்ஜிஆர் சிலை, சிவி.என்.சாலை, ஆயில் மில் ஆகிய பகுதிகளிலும், கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட மணவாளநகர் பகுதியிலும் மாவட்ட அவைத்தலைவர் இ.இன்பநாதன், நகர செயலாளர் ஜி.கந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் சூரகாபுரம் கே.சுதாகர், ராமஞ்சேரி எஸ்.மாதவன், மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் எஸ்.ஞானகுமார், நிர்வாகிகள் எஸ்.வேல்முருகன், எழிலரசன், ஒன்றிய கவுன்சிலர் பூண்டி விஜி, துக்காராம், சுமித்ரா வெங்கடேசன், குமரேசன், ராமதாஸ், தியாகு, ஜி.உமாபதி, கோட்டீஸ்வரன், ஆர்.ஆர்.சுரேஷ் மற்றும் கிளை செயலாளர்கள் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Related Stories: