திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெரியவர்களுக்கு வைரஸ் காய்ச்சல், மலேரியா பரவும் அபாயம்; அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு

திருவள்ளூர்: தமிழகத்தில் தற்போது கோடை காலம் முடிந்து மழை காலம் தொடங்கியது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த பருவ நிலை மாற்றம் காரணமாக குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை வைரஸ் ஜூரம் அதிகளவில் ஏற்படுவதாகவும் இதனால் மலேரியா ஜூரமும் பரவி வருவதாக  கூறப்படுகிறது. இதனால் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழக்கத்திற்கு மாறாக ஜூரம் காரணமாக குழந்தைகள் முதல், பெண்கள், ஆண்கள் முதியவர்கள் என ஏராளமானோர் குவிந்து சிகிச்சைப் பெற்று சென்றனர்.

பருவ நிலை மாற்றம் காரணமாகவே இது போன்ற நோய்கள் ஏற்படுவதாக மருத்துவத்துறையினர் தெரிவித்தனர். மேலும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால் சிகிச்சைக்காக குவிந்த  நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் ஆலோசனையின் படி செயல்பட்டால் நோய் பரவாது என்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் வைரஸ் காய்ச்சல் மற்றும் மலேரியா காய்ச்சலுக்கு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: