சிஆர்பிஎப் வீரர்களுக்கான பேட்மின்டன் போட்டி; ஆவடி அணிக்கு 2-ம் இடம்

ஆவடி: ஆவடியில் சிஆர்பிஎப் வீரர்களுக்கான 3 நாள் தொடர் இன்டர் செக்டர் பேட்மின்டன் போட்டி  நிறைவடைந்தது. இந்தியாவின் 26 மாநிலங்களை சேர்ந்த 150 சிஆர்பிஎப் வீரர்களுக்கான 3 நாள் தொடர் இன்டர்செக்டர் பேட்மின்டன் போட்டி கடந்த மாதம் 30ம் தேதி ஆவடி சிஆர்பிஎப் பயிற்சி மைய வளாகத்தில் துவங்கியது. இப்போட்டியை ஆவடி சிஆர்பிஎப் டிஐஜி தினகரன் துவக்கிவைத்தார். இதில் சுமார் 60 சிஆர்பிஎப் அதிகாரிகள், 91 வீரர்கள் பங்கேற்று, பேட்மின்டனில் தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினர். கடந்த 3 நாட்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த தொடர் பேட்மின்டன் போட்டியின் இறுதியில் ராஜஸ்தான் செக்டர் அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச்சென்றது.

மேலும், இப்போட்டியை நடத்திய ஆவடி சிஆர்பிஎப் அணியை உள்ளடக்கிய தெற்கு செக்டர் அணி 2ம் இடத்தை பிடித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை ஆவடி சிஆர்பிஎப் டிஐஜி தினகரன் வழங்கி வாழ்த்தினார். பின்னர் ஒரே சமயத்தில் 26 குரூப் சென்டர் கொடிகளும் ஏற்றப்பட்டது. சிஆர்பிஎப் வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

Related Stories: