×

மீஞ்சூரில் விநாயகர் சிலை ஊர்வலம்; போலீசார் அணிவகுப்பு

பொன்னேரி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை வரும் 4ம் தேதி பாதுகாப்புடன் கடலில் கரைப்பதை வலியுறுத்தும் வகையில், மீஞ்சூர் பஜாரில் நேற்று முன்தினம் காவல்துறை சார்பில் விநாயகர் ஊர்வலத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த அணிவகுப்புக்கு செங்குன்றம் உதவி ஆணையர் முருகேசன் தலைமை தாங்கினார். இந்த அணிவகுப்பில் மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் சிரஞ்சீவி, எஸ்ஐ வேலுமணி, சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் மீஞ்சூர் பஜாரில் துவங்கி அரியன்வாயல் பகுதி வரை சென்று மீண்டும் பஜார் வழியாக மீஞ்சூர் காவல் நிலையத்துக்கு பேரணியாக வந்தனர்.

Tags : Ganesha ,Meenjoor , Ganesha statue procession in Meenjoor; Police parade
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்