×

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ் இன்று விண்ணில் பாய்கிறது

கேப் கார்னிவெல்: நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது ‘அப்போலோ’ திட்டம் மூலம் நிலவுக்கு முதல் முறையாக மனிதர்களை கடந்த 1969ம் ஆண்டு அனுப்பி சாதனை படைத்தது. அதன் பின், தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைக்க ஆர்ட்டெமிஸ்-I திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆர்டெமிஸ் ராக்கெட் ஆகஸ்ட் 29ம்தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது. ஆனால், விண்வெளி ஓடத்தின் 3வது இன்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் எரிபொருள் நிரப்புவதில் பிரச்சினை ஏற்பட்டது.

அப்போது ராக்கெட்டின் 4 பிரதான ஆர்எஸ்-25 என்ஜின்களில் ஒன்று மிகவும் கடுமையாக சூடேறியது. இதனால் விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில், ப்ளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.17 மணிக்கு ஆர்டெமிஸ் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. விண்ணில் ஏவுவதற்கு காலநிலை 60% சாதகமாக இருப்பதால் இன்று விண்வெளிக்கு ராக்கெட்டை ஏவுவதில் தாமதம் ஏற்படாது என நாசா தெரிவித்துள்ளது. ஆர்டெமிஸ் விண்ணில் செலுத்தப்படுவதை பார்க்க 4 லட்சம் பேர் வரை புளோரிடா விண்வெளி மையத்தின் கடலோரப் பகுதியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : NASA , NASA's Artemis mission to send humans to the moon takes off today
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...