உக்ரைனை நோக்கி செல்லாமல் ரஷ்யாவை தாக்கிய சொந்த ஏவுகணை

மாஸ்கோ: ரஷ்யாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று திடீரென திரும்பி, சொந்த பகுதியையே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து, 6 மாதங்களாகியும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், ரஷ்ய வீரர்கள் கடந்த புதன்று வட கிழக்கு உக்ரைனை நோக்கி எஸ்-300 என்ற 6 ஏவுகணைகளை ஏவினர். ஆனால், விண்ணில் ஏவப்பட்ட ஒரு ஏவுகணை திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக அது, உக்ரைன் இலக்கை நோக்கி செல்லாமல், திடீரென திரும்பி ரஷ்ய பகுதியையே தாக்கியது. உக்ரைக்கு அருகே அமைந்துள்ள பெல்கோரோட் நகரில் இந்த ஏவுகணை தாக்கியது. உக்ரைன் எல்லையில் இருந்து 40 கிமீ தொலைவில் இருக்கும் இந்த பகுதி, ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்தது. ஆனால் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏவுகணை சொந்த நாட்டிலேயே விழுந்து பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் ரஷ்ய அரசையும், பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories: