×

உளுந்தூர்பேட்டை பகுதியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டுனர்கள் அவதி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இன்று அதிகாலை முதல் 7 மணி வரையில் கடும் பனிப்பொழிவு நிலவியது, இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியே வர சிரமப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துடன் வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர்.

தினந்தோறும் காலையில் நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இந்த பனி மூட்டத்தினால் அவதி அடைந்தனர். பனி மூட்டம் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி குறைந்த வேகத்தில் சென்றது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக உளுந்தூர்பேட்டை பகுதியில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது இந்த திடீர் பனி முட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

Tags : Ulandurbate , Heavy snowfall in Ulundurpet area: motorists suffer
× RELATED பட்டியல் மக்கள் குடியிருப்பில்...