விமானத்தின் இன்ஜினில் கோளாறு மீண்டும் டெல்லி திரும்பியது விமானம்

புதுடெல்லி: உதய்பூர் நோக்கிச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் டெல்லி திரும்பியது. தலைநகர் டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை நோக்கிச் சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம் டெல்லி திரும்பியது.

இதுகுறித்து விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘நேற்று மாலை 6.15 மணியளவில் டெல்லியில் இருந்து உதய்பூர் நோக்கிச் ெசன்ற இண்டிகோ விமானத்தின் இஞ்சின் எண் இரண்டில், சில அதிர்வுகள்  உணரப்பட்டன. அதனால் அந்த விமானம் உடனடியாக டெல்லி வந்தது. விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.

தொழில்நுட்பக் காரணம் குறித்து அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது’ என்றனர். நேற்று முன்தினம் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறை எதிர்கொண்டதால், அந்த விமானம் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து மீண்டும் டெல்லி திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: