×

அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: அறப்போர் இயக்கத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் கடந்த 2019, முதல் 2021ம் ஆண்டுகள் வரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனால், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது. இதனால், தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளரான ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடவும், தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்துக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமெனவும் கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆதாரங்கள் அடிப்படையில் ஈபிஎஸ்க்கு எதிராக புகார் அளிக்கப்பட்ட்டதாக அறப்போர் இயக்கம் வாதிட்டது.

அறப்போர் இயக்கத்தின் செயல் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக ஈபிஎஸ் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி தொடுத்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Edapadi Palanisamy ,Cressors Movement ,iCourt , Edappadi Palaniswami case against Arapor Movement: ICourt adjourned judgment without specifying a date
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு