கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான்-ஹாங்காங் இன்று சார்ஜாவில் மோதல்

சார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடக்கும் கடைசி லீக் போட்டியில் ஏ பிரிவில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் முதல் போட்டியில் இந்தியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. இன்று வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது.

மறுபுறம் நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங், முதல் போட்டியில் இந்தியாவில் தோல்வி அடைந்த நிலையில் இன்று பாகிஸ்தானுக்கு சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச டி.20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் முதன்முறையாக மோத உள்ளன. ஆனால் ஒரு நாள் போட்டியில் 3 முறை மோதியுள்ளன. இந்த 3 போட்டியிலும் பாகிஸ்தான் தான் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: