×

விழுப்புரம், எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு வெடிவைத்து தகர்ப்பு; ரூ.70கோடியில் அணை சீரமைப்பு: அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே உள்ள 72 ஆண்டுகள் பழமையான எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டின் மையப்பகுதியை வெடிவைத்து தகர்க்கப்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம் மாவட்டம் முக்கிய நீர் ஆதாரமான தென்பண்ணை ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு கனமழையால் சேதமான விழுப்புரம் அருகே உள்ள 1950ம் ஆண்டு கட்டப்பட எல்லீஸ் தடுப்பணை அதாவது கப்பூர் ஏனாதி மங்கலம் இடையே உள்ள அணையில் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் மோகன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். அதன்பின், மண் அரிப்பை தடுக்கும் வகையில் 150 லாரிகளில் கொண்டு சென்று பாறை கற்கள் கொட்டப்பட்டனர். அதிகளவு தண்ணீர் வந்தால் பாதிப்பு ஏற்படும் என்று கருதி அணையின் மையப்பகுதியில் வெடி வைத்து தகர்க்கப்பட்டு தண்ணீர் செல்ல வழி செய்யப்பட்டது.இதனிடையே, மழைக்காலம் முடிந்த பின்னர் 70 கோடி ரூபாய் மதிப்பில் இந்த தடுப்பணை சீரமைத்து கட்டப்பட்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.   


Tags : Viluppuram ,Ellis ,Minister ,Ponmudi , Villupuram, Ellis, Chatram, Dam, Blast, Demolition, Renovation, Ponmudi
× RELATED பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!!