×

ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவுகிறது நாசா: திட்டத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்ற அறிவிப்பால் பரபரப்பு

வாசிங்டன்: நிலவுக்கு மனிதனை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை விண்ணில் ஏவும் திட்டத்தின் வெற்றிக்கு உத்தரவாதம் தர முடியது என்ற அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை நாசா தொடங்கியுள்ளது. 2025ம் ஆண்டுகுள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா தற்போது ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளது. ஏற்கனவே, தொழில் நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் ஏவுதல் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை ஆர்டெமிஸ்-1 விண்ணில் பாய்கிறது.

இந்நிலையில் புளோரிடாவில் பேசிய ஆர்டெமிஸ் திட்ட மேலாளர் மைக் சாராஃபின் ராக்கெட்டை ஏவும் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வந்தாலும் அதன் வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறினார்.
முதலில் ஆகஸ்ட் 29ம் தேதி காலை ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்கியது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விண்கலம் புறப்படுவதற்காக கவுண்டன் தொடங்கப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக சில தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் கவுண்டன் நிறுத்தப்பட்டு ஏவுதல் கை விடப்பட்டது. ராக்கெட்டில் சில நாட்களாக நடைபெற்ற சீரமைப்பு பணியில் பழுதுகள் சரிசெய்யப்பட்டதை அடுத்து நாளைய தினம் ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை விண்ணுக்கு ஏவ நாசா திட்டமிட்டுள்ளது.  


Tags : NASA , Artemis-1 rocket launches into space tomorrow, announced by NASA
× RELATED ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்