×

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா காலமானார்: அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி திரை இசை பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 49. பம்பா பாக்யா ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராவணன் படத்தில் பாடகராக அறிமுகமானார். எந்திரன் 2.O படத்தின் புள்ளினங்கால், சர்க்கார் படத்தின் சிம்டாங்காரன், பிகில் படத்தின் காலமே என்ற பல ஹிட் பாடல்களை பம்பா பாக்யா பாடியுள்ளார். சமீபத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியான பொன்னி நதி பாடலின் ஆரம்ப வரிகளை பாடியிருந்தார். மேலும், இன்னொரு பாடலையும் இப்படத்தில் அவர் பாடியிருக்கிறார். இது தவிர சர்வம் தாள மையம், அன்பறிவு, இரவின் நிழல், ஆக்சன், ராட்சசி போன்ற திரைப்படங்களிலும், பல ஆல்பங்களிலும் அவர் பல பாடல்களை பாடியுள்ளார்.

திரையிசை கலைஞர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட பம்பா பாக்யா தன் அழுத்தமான குரலால் ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறார். இவர் பாடிய ராட்டி ஆல்பம் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர் திடீர் ஏற்பட்ட உடல்நல குறைவால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருடைய திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Tags : bamba bagya , Celebrity, Background, Singer, Bamba, Bhagya, Kalamanar, Film Industry, Obituary
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...