×

கார் ஏற்றி காவலரை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கோர்ட்டில் சரண்

செய்யூர்: செய்யூர் அருகே கார் ஏற்றி காவலரை கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த வடக்கு செய்யூர் பகுதியை சேர்ந்த காவலர் காமேஷ் குமார் (37). இவர், கடந்த 30ம் தேதி செய்யூர் அருகே சாலையோரம் நின்று செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த கார் அவர் மீது பலமாக மோதியதில் காமேஷ் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேநேரம், காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மதன்பிரபு (40) மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் அங்கிருந்து தலைமறைவானார்கள்.

இது குறித்து செய்யூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், காமேஷ் குமாரும், மதன்பிரபுவும் உறவினர்கள் என்பதும் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில் மதன்பிரபு, காமேஷ் குமாரை கார் ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து மதன்பிரபு மீது போலீசார் கொலை வழக்கு பதிந்ததோடு மூன்று தனிப் படைகள் அமைத்து அவரையும், அவரது நண்பர்களையும் தேடி வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் தலைமறைவாக இருந்த மதன்பிரபு கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மதன்பிரபுவை தேடி வந்தனர். இந்நிலையில்,  தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான மதன்பிரபு நேற்று மதியம் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Saran , Charan is the main accused in the case of carjacking and killing a policeman
× RELATED அம்பத்தூர் பேருந்து நிலையம் ₹12...