போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி; கலெக்டர் பங்கேற்பு

திருத்தணி:  திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் ஆற்காடு குப்பத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் நேற்று மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்த கூடாது பயன்படுத்தும் சக மாணவர்களை ஆசிரியர்களிடம் கூறி அவர்களை ஒழுக்க நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினர்.

மேலும் மாணவர்களின் கல்வி திறன் இதனால் பாதிக்கப்படும் .எனவே இது போன்ற செயலில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் திருத்தணி டிஎஸ்பி விக்னேஷ் மற்றும் திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா ஒன்றிய குழு துணை தலைவர் சுஜாதா மகாலிங்கம் மற்றும் பிடிஓ சாந்தி, கலைச்செல்வி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி ஆண்டியப்பன் மற்றும் திமுக பிரமுகர் ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: