×

கருப்பின அடிமைத்தன விடுதலை அமெரிக்காவில் ஜூன் 19ம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த கருப்பின மக்கள் 1862ம் ஆண்டு விடுதலைப் பிரகடனத்தின்படி, ஆபிரகாம் லிங்கன் அதிபராக இருந்த போது, 1865ம் ஆண்டு உள்நாட்டுப் போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். முதன் முதலாக, கருப்பின விடுதலையின் நினைவாக ஜூன் 19ம் தேதி ‘ஜூனைட்டின்’ என்ற பெயரில் கடந்த 1980 முதல் டெக்சாசில் விடுமுறை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பில் 415 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். குடியரசு கட்சி உறுப்பினர்கள் 14 பேர் மட்டும் எதிராக வாக்களித்தனர். இதையடுத்து, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அதிபர் பைடனின் கையெழுத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில், அதிபர் பைடன் இந்த மசோதாவில் நேற்று கையெழுத்திட்டார். அப்போது பேசிய அவர், “ஜூனைட்டின் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு  இருப்பது, கருப்பின விடுதலையை குறிப்பது மட்டுமல்ல. அவர்களுக்கு வரவிருக்கும் பிரகாசமான எதிர்கால வாக்குறுதியையும் குறிப்பதாகும்,’’ என்றார். …

The post கருப்பின அடிமைத்தன விடுதலை அமெரிக்காவில் ஜூன் 19ம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,Abraham Lincoln ,America ,
× RELATED அமெரிக்காவில் போராட்டத்தை...