×

67வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது எல்ஐசி நிறுவனம்

சென்னை: எல்ஐசி நிறுவனம் நேற்றுடன் 66 ஆண்டு நிறைவு செய்து, 67வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்ஐசி, கடந்த 1956ம் ஆண்டு ரூ.5 கோடி  முதலீட்டில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.42,30,616 கோடியாக வளர்ந்துள்ளது. காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைந்து 20 ஆண்டுக்கு மேல் ஆகியும், தற்போதும் இந்த நிறுவனம் முதல் ஆண்டு பிரீமியம் வருவாயில் 63.25 சதவீத சந்தைப் பங்களிப்பையும், காப்பீட்டு பாலிசிக்கள்  எண்ணிக்கையில் 74.62 சதவீத சந்தைப் பங்களிப்பையும் கொண்டுள்ளது.

கடந்த 2021-22 நிதியாண்டில் எல்ஐசி 2.17 கோடி புதிய பாலிசிக்களை விற்பனை செய்து, முதலாண்டு பிரீமியம் வருவாயில் ரூ.1.98 லட்சம் வசூலித்து 7.92 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. நடப்பு ஆண்டிலும் முதலாண்டு பிரீமியம் வருவாயில் 64.96 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 267.23 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு, ரூ.1,92,568 கோடியை செட்டில் செய்துள்ளது. 8 மண்டல அலுவலகங்கள், 113 பிராந்திய அலுவலகங்கள், 2,048 கிளைகள் மற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் தனிநபர் காப்பீட்டில் மட்டும் பல்வேறு தரப்பினரின் தேவைகளுக்கு ஏற்ப 33 திட்டங்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : LIC , LIC enters its 67th year
× RELATED அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. செய்த ...