அல்டிமேட் கோ கோ லீக் இன்று முதல் பிளே ஆப்

பூனே: கிரிக்கெட், கால்பந்து ஆட்டங்களுக்காக நடைபெறும் ஐபிஎல், ஐஎஸ்எல் தொடர்கள் போன்று கோ கோ விளையாட்டுக்கும் ‘அல்டிமேட் கோ கோ லீக்’ போட்டி இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. பூனேவில் ஆக.14ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் சென்னை குயிக் கன்ஸ், மும்பை கில்லாடிஸ், குஜராத் ஜயன்ட்ஸ், ஒடிஷா ஜெகர்னட்ஸ், ராஜஸ்தான் வாரியர்ஸ், தெலுங்கு யோதாஸ் என 6 அணிகள் களம் கண்டுள்ளன. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத், ஒடிஷா, தெலுங்கு, சென்னை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்று இரவு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் தெலுங்கு-சென்னை அணிகள் களம் காண உள்ளனர். தொடர்ந்து நடைபெறும் முதல் குவாலிபயர் ஆட்டத்தில் குஜராத்-ஒடிஷா அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து நாளை 2வது குவாலிபயர் ஆட்டமும், நாளை மறுநாள் இறுதி ஆட்டமும் நடைபெற உள்ளன.

Related Stories: