அமெரிக்காவிலும் மதவெறி ரொம்ப கேவலமா இருக்க... சக இந்தியர் மீது எச்சில் துப்பிய சீக்கியர்

நியூயார்க்: அமெரிக்காவில் இந்தியரே, மற்றொரு இந்தியரை அவமானப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மீது அந்நாட்டு மக்கள் இனவெறி தாக்குதல் நடத்துவதும், அவமானப்படுத்துவதும் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில் கூட, 4 இந்திய பெண்களை ஒரு அமெரிக்கப் பெண் இழிவுப்படுத்தி தாக்கியதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் கிருஷ்ணன் ஜெயராமன், சக இந்தியரான சீக்கியர் ஒருவரால் மதவெறி தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 8 நிமிடங்கள் பதிவான அந்த வீடியோவில், தேஜிந்தர் சிங் என்ற 37 வயது சீக்கியர், கிருஷ்ணன் ஜெயராமனை பார்த்து,  ‘நீ அசுத்தமான இந்து… பார்க்கவே கேவலமாக இருக்கிறாய்... இனி, இதுபோல் வெளியே வராதே...’ என்று திட்டிக் கொண்டே, அவர் மீது 2 முறை எச்சில் உமிழ்கிறார். இந்த சம்பவத்தால் மிகவும் பயந்து விட்டதாகவும், தன் மீது சக இந்தியர் ஒருவரே மதவெறி தாக்குதல் நடத்தியது மிகவும் வேதனை அளிப்பதாக கிருஷ்ணன் ஜெயராமன் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: