ஐசிசி டி.20 உலக கோப்பை ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

சிட்னி: 8வது ஐசிசி டி.20 ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் நவம்பர் 13ம்தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு நடந்த டி.20 உலக கோப்பையில் ஆடிய வீரர்களே இடம்பெற்றுள்ளனர்.

மிட்செல் ஸ்வெப்சனை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை. அவருக்கு பதிலாக புதிதாக டிம் டேவிட் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த இவர் அந்நாட்டு அணிக்காக 14 டி.20 போட்டிகளில் ஆடிய நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் குடியேறி அணியில் இடம்பிடித்துள்ளார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை ஒரு போட்டியிலும் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை தொடருக்கு முதல் அணியாக ஆஸ்திரேலியா அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அணி வீரர்கள் விபரம்: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஆஷ்டன் அகர், கம்மின்ஸ், டிம் டேவிட், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ் மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா.

Related Stories: