×

விநாயகர் ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!: அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு நேரில் ஆறுதல்..!!

விருதுநகர்: விநாயகர் ஊர்வலத்தின் போது விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன்புத்தூரில் விநாயகர் ஊர்வலத்தின்போது சப்பரம் மின் கம்பி மீது உரசியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சொக்கநாதன்புத்தூரில் நேற்று இரவு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வந்த விநாயகரை மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லும் போது எதிர்பாராத விதமாக சப்பரத்தின் மேல் பகுதி உயரழுத்த மின் கம்பி மீது உரசியது. சப்பரம் முழுவதும் பரவிய மின்சாரம் அதனை பிடித்து இழுத்து சென்றோர் மீதும் பாய்ந்தது. இதில் முனீஸ்வரன், மாரிமுத்து, பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.

5 பேரும் அருகே உள்ள தென்காசி சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முனீஸ்வரன், மாரிமுத்து ஆகிய இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு, ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்க அறிவுறுத்திய அமைச்சர்கள், நிதி உதவியும் அளித்தனர். விபத்து தொடர்பாக சேத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Tags : Chapparam ,Vinayagar ,KKSSR ,Ramachandran ,Golden ,Southern Kingdom , Vinayagar Procession, Chapparam, Pali, Ministers K.K.S.S.R. Ramachandran, Golden South
× RELATED பேரிடர் பாதிப்பிற்குள்ளாகும் சென்னை,...