×

நோ ஒயிட்..ஒன்லி பிளாக்!: விளம்பரங்களில் வெளிநாட்டு மாடல் கலைஞர்கள் நடிக்க தடை.. உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்க நைஜீரிய அரசு அதிரடி சட்டம்..!!

நைஜீரியா: விளம்பரங்களில் உள்ளூர் கலைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் விதமாக வெளிநாட்டு மாடல் கலைஞர்களை பயன்படுத்துவதற்கு நைஜீரிய அரசு தடை விதித்துள்ளது. மாடல் கலைஞர்களாக பொதுவாக வெள்ளை நிறத்தவர்களை மட்டுமே பயன்படுத்தப்படுவதை நிறுவனங்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றன. இதனால் கறுப்பின மக்கள் வாழும் நாடான நைஜீரியாவில் இத்துறையின் வேலைவாய்ப்புகள் அனைத்தும் வெளிநாட்டினருக்கு செல்லும் சூழல் நிலவுகிறது. இதற்கு முடிவுக்கட்டும் விதமாக நைஜீரிய அரசு, உலகில் வேறு எந்த நாடும் இதுவரை இயற்றாத புதிய சட்டத்தை அதிரடியாக பிறப்பித்துள்ளது.

இதன்படி நைஜீரியாவில் விளம்பரங்களில் வெளிநாட்டு மாடல் கலைஞர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னணி குரல் கலைஞர்களுக்கும், நைஜீரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் திறமைகளை வளர்க்கும் விதமாகவும், ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாகவும், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்த புதிய சட்டம் அக்டோபர் 1ம் தேதிக்கு நடைமுறைக்கு வருகிறது. இதற்கு மாடல் கலைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Tags : Advertising, Foreign Models, Nigerian Government
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...